Verse 7859 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppungoor · Verse 5 of 10
திருப்புன்கூர் · 7.55.5
கோல மால்வரை மத்தென நாட்டிக் கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்தஆல நஞ்சுகண் டவர்மிக இரிய அமரர் கட்கருள் புரிவது கருதிநீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்தநீ செய்தசீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.