Verse 7860 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppungoor · Verse 6 of 10
திருப்புன்கூர் · 7.55.6
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டுதிகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.