Verse 7886 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 11 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.11
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப் புனித னைப்புலித் தோலுடை யானைச்செய்ய னைவெளி யதிரு நீற்றில் திகழு மேனியன் மான்மறி ஏந்தும்மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.