Verse 7989 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirunallaaru · Verse 7 of 10
திருநள்ளாறு · 7.68.7
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்தஅறவ னைஅம ரர்க்கரி யானை அமரர் சேனைக்கு நாயக னானகுறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்நறைவி ரியும்நள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.