Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 6 of 32
பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;குன்றா மறையும், தருமமும், மெய் குழைந்து குழைந்து விழுந்து அழுத;பின்றாது உடற்றும் பெரும்பாவம் அழுத பின் என் பிறர் செய்கை?நின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.