verse 8812 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 9 of 32
கம்பராமாயணம் 8812 · சீதை களம் காண் படலம்
விழுந்தாள்; புரண்டாள்; உடல்முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க்கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;'கொழுந்தா! 'என்றாள், 'அயோத்தியர்தம் கோவே! 'என்றாள்; எவ் உலகும்தொழும் தாள் அரசேயோ! 'என்றாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்.