Verse 6840 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 2 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.2
சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்நமனையொரு கால்குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்குமரனையும் மகனாக வுடையார் போலுங் குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.