Verse 6842 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 4 of 11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.4

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும் வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்ஐவேள்வி ஆறங்க மானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
Share