Verse 6843 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 5 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.5
துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ் சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும் பூதகணம் புடைசூழ வருவார் போலும்மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும் வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.