Verse 6846 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 8 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.8
குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங் குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும் புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும் வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.