Verse 6848 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 10 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.10
கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங் கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்எரியதொரு கைதரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும் வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.