Verse 6852 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 3 of 10
திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.3
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித் தானைஎத்தேவு மேத்தும் இறைவன் றன்னை எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.