Verse 6857 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 8 of 10
திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.8
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்டபோரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.