Verse 6862 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 3 of 11
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.3
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றிஉருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றிதிருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றிகருவாகி யோடு முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.