Verse 6866 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 7 of 11
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.7
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றிஎண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிவிண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிகண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.