Verse 6871 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 1 of 10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.1

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றிநிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றிமறையுடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப் படுவாய் போற்றிகறையுடைய கண்ட முடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share