Verse 6872 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 2 of 10
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.2
முன்பாகி நின்ற முதலே போற்றி மூவாத மேனிமுக் கண்ணா போற்றிஅன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி ஆறேறு சென்னிச் சடையாய் போற்றிஎன்பாக வெங்கு மணிந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிகண்பாவி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.