Verse 6876 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 6 of 10
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.6
ஆறேறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றிநீறேறு மேனி யுடையாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றிகூறேறு மங்கை மழுவா போற்றி கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றிகாறேறு கண்ட மிடற்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.