Verse 7878 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 3 of 12

திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.3

வெந்த நீறுமெய் பூசவல் லானை வேத மால்விடை ஏறவல் லானைஅந்தம் ஆதிஅறி தற்கரி யானை ஆறலைத் தசடை யானைஅம் மானைச்சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத் தேவ தேவனென் சொல்முனி யாதேவந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Share