Verse 7879 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 4 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.4
தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப் பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானைநடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானைமடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.