Padalam 11 / 11 · Aranya Kandam · Kambar

Savari Pirappu Neengu Padalam

சவரி பிறப்பு நீங்கு படலம் · 9 verses · 3800–3808

Share

பாடல்கள் The verses

1 verse 3800
கண்ணிய தருதற்கு ஒத்தகற்பக தருவும் என்ன ,உண்ணிய நல்கும் செல்வம்உறுநறும் சோலை , ஞாலம்எண்ணிய இன்பம் அன்றித்துன்பங்கள் இல்லையானபுண்ணியம் புரிந்தோர் வைகும்துறக்கமே போன்றது அன்று , ஏ !
Open this verse
2 verse 3801
அன்னது ஆம் இருக்கை நண்ணி ,ஆண்டு நின்று , அளவு இல் காலம்தன்னையே நினைந்து நோற்கும்சவரியைத் தலைப்பட்டு , அன்னாட்குஇன் உரை அருளித்'' தீது இன்றுஇருந்தனை போலும் ? '' என்றான் ,முன் இவற்கு இது என்று எண்ணல்ஆவது ஓர் மூலம் இல்லான் .
Open this verse
3 verse 3802
ஆண்டு , அவள் அன்பின் ஏத்தி ,அழுது இழி அருவிக் கண்ணள் ,'' மாண்டது என் மாயம் பாசம் !வந்தது வரம்பு இல் காலம்பூண்டமா தவத்தின் செல்வம் !போயது பிறவி ! '' என்பாள் ,வேண்டிய கொணர்ந்து நல்க ,விருந்து செய்து இருந்த வேலை .
Open this verse
4 verse 3803
'' ஈசனும் , கமலத் தோனும் , இமையவர் யாரும் , எந்தை !வாசவன் தானும் ஈண்டு வந்தனர் , மகிழ்ந்து நோக்கி ,' ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது ; இராமற்கு ஆயபூசனை விரும்பி , எம்பால் போதுதி ' என்று போனார் . ''
Open this verse
5 verse 3804
'' இருந்தனென் , எந்தை ! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மைபொருந்திட ; இன்றுதான் என் புண்ணியம் பூத்தது '' என்றஅருந் தவத்து அரசி தன்னை அன்பு உற நோக்கி ,'' எங்கள்வருந்து உறு துயரம் தீர்த்தாய் , அம்மனை ! வாழி ! '' என்றான் .
Open this verse
6 verse 3805
அனகனும் இளைய கோவும்அன்று அவண் உறைந்த பின்றை ,வினை அறு நோன்பினாளும்மெய்ம்மையின் நோக்கி , வெய்யதுனை பரி தேரோன் மைந்தன்இருந்த அத் துளக்கு இல் குன்றம்நினைவு அரிது ஆயற்கு ஒத்தநெறி எலாம் நினைந்து சொன்னாள் .
Open this verse
7 verse 3806
வீட்டினுக்கு அமைவது ஆனமெய் நெறி வெளியிற்று ஆகக்காட்டுறும் அறிஞர் என்ன ,அன்னவள் கழறிற்று எல்லாம்கேட்டனன் என்ப மன்னோ ,கேள்வியால் செவிகள் முற்றும்தோட்டவர் உணர்வின் உண்ணும்அமுதத்தின் சுவையாய் நின்றான் .
Open this verse
8 verse 3807
பின் , அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியால் ஏதன் உடல் துறந்து , வானம் தனிமையின் இனிது சார்ந்தாள் ;அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவு இன்று எய்திப்பொன் அடிக் கழல்கள் ஆர்ப்பப் புகன்ற மா நெறியில் போனார் .
Open this verse
9 verse 3808
தண் எனும் கானும் குன்றும் நதிகளும் தவிரப் போனார் ,மண் இடை வைகல் தோறும் வரம்பு இலா மாக்கள் ஆடக்கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலேபுண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் .
Open this verse