கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்கள் ஏ.
Open this verse
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்கள் ஏ.
Open this verse
சித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலை,என் கு உணர்த்த அரிது, எண்ணிய மூன்றனுள்முன் குணத்தவரே முதலோர்; அவர்நல் குணம் கடல் ஆடுதல் நன்று! அரோ.
Open this verse
ஆதி அந்தம் அரி என யாவையும்,ஓதினார், அலகு இல்லன உள்ளனவேதம் என்பன மெய் நெறி நன்மையன்பாதம் அல்லது பற்று அலர்; பற்று இலார்.
Open this verse
அவையடக்கம்
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று, ஒருபூசை முற்றவும் நக்குபு புக்கு எனஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்காசு இல் கொற்றம் அத்து இராமன் கதை அரோ.
Open this verse
நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?வைத வைவின் மரா மரம் ஏழ் தொளைஎய்த எய்தவன் கு எய்திய மா கதைசெய்த செய் தவன் சொல் நின்ற தேயம் அத்து ஏ.
Open this verse
வையம் என்னை இகழவும், மாசு எனக்குஎய்தவும், இது இயம்புவது யாது? எனில்,பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்தெய்வ மா கதை மாட்சி தெரிக்க ஏ.
Open this verse
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்குஉறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்பறை அடுத்தது போலும் என் பா. அரோ.
Open this verse
முத்தமிழ்த் துறையின் முறை போகியஉத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;பித்தர் சொன்ன உம் பேதையர் சொன்ன உம்பத்தர் சொன்னவும் பன்னப் பெறுப ஓ?
Open this verse
அறையும் ஆடு அரங்கு உம் மடப் பிள்ளைகள்தறையில் கீறிடில், தச்சர் உம் காய்வர் ஓ?இறை உம் ஞானம் இலாத என் புன் கவிமுறையின் நூல் உணர்ந்தார் உம் முனிவர் ஓ!
Open this verse
நூல் வரலாறு
தேவ பாடையின் இக் கதை செய்தவர்மூவர், ஆன் அவர் தம் உளும் முந்தியநாவினார் உரையின் படி நான் தமிழ்ப்பா இன் ஆல் இது உணர்த்திய பண்பு. அரோ.
Open this verse
நூல் பெயர் உம் நூல் இயற்றிய இடம் உம்
நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்தொடை நிரம்பிய தோம் அறு மா கதை,சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்தது ஏ.
Open this verse