சூரியன் உதித்தல்
மீன் உடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு, வெய்யகான் உடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சித்,தான் உடை உதயம் என்னும் தமனியத் தறியில் நின்று,மானுட மடங்கல் என்னத் தோன்றினன் வயங்கு வெய்யோன்.
Open this verse
சூரியன் உதித்தல்
மீன் உடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு, வெய்யகான் உடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சித்,தான் உடை உதயம் என்னும் தமனியத் தறியில் நின்று,மானுட மடங்கல் என்னத் தோன்றினன் வயங்கு வெய்யோன்.
Open this verse
தசரத மன்னன் சேனையோடு சோணையாற்றை யடைதல்
முறை எலாம் முடித்த பின்னர்,மன்னனும் முரித் தேர்மேல்இறை எலாம் வணங்கப் போனான்;எழுந்து உடன் சேனை வெள்ளம்குறை எலாம் சோலை ஆகி,குழி எலாம் கழுநீர் ஆகி,துறை எலாம் கமலம் ஆன,சோணையாறு அடைந்தது அன்று ஏ.
Open this verse
அனைவரும் சோலை சேர்தல்
அடைந்து அவண் இறுத்த பின்னர்,அருக்கனும் உம்பர்ச் சார,மடந்தையர் குழாங்களோடு,மன்னரும், மைந்தர் தாமும்,குடைந்து வண்டு உறையும் மென் பூகொய்து இனிது ஆட, மைதீர்தடங்களும் மடுவும் சூழ்ந்ததண் நறும் சோலை சார்ந்தார்.
Open this verse
மாதர் சோலை சார்தல்
திண் சிலை புருவம் ஆகச்,சேய் அரிக் கருங்கண் அம்பு ஆல்புண் சில செய்வர் என்றுபோவன போன்ற மஞ்ஞை;பண் சிலம்பு அளிகள் ஆர்ப்ப,நாணினால் பறந்த போன்ற,ஒண் சிலம்பு ஆர்ப்ப மாதர்ஒதுங்குதோறு ஒதுங்கும் அன்னம்.
Open this verse
தோழியருடன் மகளிர் ஆடல்
செம்பொன் செய் சுருளும் தெய்வக்குழைகளும் சேர்ந்து மின்னப்,பம்பு தேன் அலம்ப ஒல்கிப்,பண்ணையின் ஆடல் நோக்கிக்,கொம்பொடும் கொடி அனார் ஐகுறித்து அறிந்து உணர்தல் தேற்றார்;வம்பு அவிழ் அலங்கல் மார்பின்மைந்தரும் மயங்கி நின்றார்.
Open this verse
குயில்களின் நாணம்
பாசு இழைப் பரவை அல்குல்பண் தரு கிளவி தண் தேன்மூசிய கூந்தல் மாதர்மொய்த்த பேர் அமலை கேட்டுக்,கூசின அல்ல, பேசநாணின குயில்கள் எல்லாம்,வாசகம் வல்லார் முன் நின்றுயாவர் வாய் திறக்க வல்லார்?
Open this verse
மகளிர் கொம்புகளை வளைத்துப் பூக்கொய்தல்
நஞ்சினும் கொடிய நாட்டம்அமுது என நயந்து நோக்கிச்,செம் செவே கமலக் கையால்தீண்டலும், நீண்ட கொம்பர்தம் சிலம்பு அடியில் மென் பூசொரிந்து உடன் தாழ்ந்த என்ற ஆல்,வஞ்சிபோல் மருங்குலார் மாட்டுயாவர் ஏ வணங்கலாதார்?
Open this verse
ஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்
அம்புயம் அத்து அணங்கின் அன்னார்அ மலர் கைகள் தீண்ட,வம்பு இயல் அலங்கல் பங்கிவாள் அரி மருளும் கோளார்,தம் புயம் வரைகள் வந்துதாழ்வன; தளிர்த்த மென்பூங்கொம்புகள் தாழும் என்றல்கூறல் ஆம் தகைமைத்து ஒன்று ஓ?
Open this verse
மகளிர் முகங்களை வண்டுகள் சூழ்தல்
நதியினும் குளத்தும் பூவாநளினங்கள், குவளையோடு,மதி நுதல் வல்லி பூப்பநோக்கிய மழலைத் தும்பி,அதிசயம் எய்திப் புக்குவீழ்ந்தன, அலைக்கப் போகா;புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்?
Open this verse
பூங்கொம்புகள்
உலம் தரு வயிரம் திண் தோள்,ஒழுகி வாள் ஒளி கொள் மேனி,மலர்ந்த பூம் தொடையல் மாலை,மைந்தர்பால், மயிலின் அன்னார்கலந்தவர் போல ஒல்கிஒசிந்தன, சில கை வாராப்,புலந்தவர் போல நின்று,வளைகில பூத்த கொம்பர்.
Open this verse
மகளிர் பூங்கொடிகளை அலங்கரித்தல்
பூ எலாம் கொய்து கொள்ளப்பொலிவு இல துவள நோக்கி,'யாவையாம் கணவர் கண்ணுக்கு?அழகு இல இவை என்று எண்ணிக்,கோவையும், வடமும், நாணும்,குழைகளும், குழையப் பூட்டிப்,பாவையர் பணிமென் கொம்பைநோக்கினர் பரிந்து நிற்பார்.
Open this verse
மகளிர் கூந்தலில் வண்டு மொய்த்தல்துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல்தும்பி ஈட்டம்,நறும் கோதையோடு நனை சின்னமும்நீத்த நல்லார்வெறும் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டலவேண்டு போதும்;உறும் போகம் எல்லாம் நலன் உள்வழி உண்பர் அன்று ஏ?
Open this verse
ஒரு நங்கையின் புலவி
மெய் போது இன் நங்கைக்கு இணை ஒப்பவள்,வெண் பளிங்கில்பொய் போது தாங்கிப் பொலிகின்றதன்மேனி நோக்கி,'இ பாவை எம்கோற்கு உயிர் அன்னவள்'என்ன உன்னிக்கை போதினோடு நெடும் கண் பனிசோர நின்றாள்.
Open this verse
ஒரு பெண் அழுத காரணம்
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒருகொம்பு, ஒர் மன்னன்தோள் உண்ட மாலை ஒரு தோகையைச்சூட்ட நோக்கித்,தாள் உண்ட கச்சில் தகையுண்டமுலைக் கண் மீதுவாள் உண்ட கண் நீர் மழை உண்டெனவார நின்றாள்.
Open this verse
மனைவி காணாவாறு ஒரு மன்னன் மறைதல்
மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேரப்,பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள்,உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழன்றாள்
Open this verse
ஒரு பெண் குயிலிடம் மலர் வேண்டுதல்
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்றா,நெய் தாவும் வேலான் ஒடு நெஞ்சு புலந்து நின்றாள்,எய்தாது நின்ற மலர் நோக்கி,'எனக்கு இது ஈண்டக்கொய்து ஈதி!' என்று ஓர் குயிலைக் கரம் கூப்பி நின்றாள்.
Open this verse
புலவி நுணுக்கம்
செம்மாந்த தெங்கின் இளம் நீர் ஐ ஒர் செம்மல் நோக்கி'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,'எ மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன ?' என்று, ஓர் ஏழைவிம்மா, வெதும்பா, வெயரா முகம், வெய்து உயிர்த்தாள்.
Open this verse
கண்புதைத்தல்
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்னபொலம் கொள் திண் தோள்மாரன் அனையான், மலர் கொய்துஇருந்தானை, வந்து ஓர்கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்கண் புதைப்ப,'ஆர்?' என்னலோடும், அனல் என்னஅயிர்த்து உயிர்த்தாள்.
Open this verse
மனைவியர்க்கு மலரைக் கொடாது ஒரு மன்னன் நிற்றல்
ஊற்று ஆர் நறை நாள் மலர், மாதர் ஒருங்கு வாசச்சேற்றால் விளையாத செம் தாமரை கைகள் நீட்டி,ஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான்,மாற்றான், உதவான், கடுவச்சையன் போல், ஒர் மன்னன்.
Open this verse
மாற்றவள் பெயர் கூறக் கேட்டு வருந்துதல்
தைக்கின்ற வேல் நோக்கினள், தன் உயிர் அன்ன மன்னன்,மைக்கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,மெய் கொண்ட நாணம் தலைக்கொண்டு, வெதும்பி, மென் பூகை கொண்டு மோந்தாள், உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்று ஏ.
Open this verse
ஓர் அரசன் மதயானைபோல் திரிதல்
திண் தோள் அரசன் ஒருவன், குலத் தேவிமார்தம்ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்கண்டு ஆதரிப்பத் திரிவான், மதம் கவ்வி உண்ணவண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான்.
Open this verse
ஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்சிந்திக், கலாப மயிலின், கண் சிவந்து போனார்.
Open this verse
ஒருத்தி மலர் தேடுவதுபோல் கணவனைத் தேடித் திரிதல்
வந்து எங்கும், தன் மன் உயிரேயோ? பிறிது ஒன்றோ?கந்தம் துன்றும் சோர் குழல் காணாள், கலை பேணாள்,அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாராள்,சிந்தும் சந்தத் தேம் மலர் நாடித் திரிவாளும்.
Open this verse
ஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்,ஆழத் துள்ளும் கள்ள நினைப்பாள், அவன் நின்றசூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாள் உம்.
Open this verse
ஒரு தலைவன் மாதவிப் பந்தரை இரத்தல்
அம் தார் ஆகம் அத்து, ஐங்கணை நூறு ஆயிரம் ஆகச்சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,'மந்தாரம் கொண்டு ஈகுதியோ? மாதவி!' என்று, ஓர்சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வான் உம்.
Open this verse
ஊடினாள் ஒருத்தி கண்ணடி பார்த்து வருந்தல்
நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள், முனிவு ஆறாள்,ஊடிக் காணக் காட்டும் நலத்தாள், உடன் நில்லாள்,தேடிச் தேடிச் சேர்த்த செழும்பூ நறுமாலைசூடிச் சூடிக், கண்ணடி நோக்கித், துவள்வாளும்.
Open this verse
ஒரு பெண் விறலியிடம் அணிகளைக் கழற்றிக் கொடுத்தல்
'மறலிக்கு ஊண் ஆம் வன் கதிர் வேலான் இடையே வந்துஉற இக் கோலம் பெற்றிலது என்றால், உடன் வாழ்வு இப்பிறவிக்கு ஏலாது; என் செய்வது இ பேர் அணி?' என்னா,விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்.
Open this verse
ஒரு பெண் ஒளிந்த கிளிக்காக ஒசிந்து வருந்தல்
வம்பில் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்கம்பிக் கின்ற நுண் இடை நோவக் கசிவாளும்,பைம்பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கிப், பயில்கின்றகொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிப்பக், குழைவாளும்.
Open this verse
அன்னத்திற்கு ஆடை அளித்தல்
தன்னைக் கண்டாள் மெல் நடை கண்டாள், தமரேபோல்துன்னக் கண்டாள்,'தோழமை' என்றாள்,'துணை' என்றாள்,'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ!' என்று,அன்னக் கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும்.
Open this verse
ஒரு பெண், மயிலுக்கு அஞ்சியும் நாணியும் மறைதல்
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள், தன் படர் அல்குல்ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்தோகைக்கு அஞ்சிக், கொம்பின் ஒதுங்கித், துணர் ஈன்றசாகைத் தன்கைக் கண்கள் புதைத்துத், தளர்வாளும்.
Open this verse
மறைந்து தேடி விளையாடுதல்
'பொன்னே! தேனே! பூமகளே! காண் எனை!' என்னாத்,தன் நேர் இல்லாள், அங்கு ஒரு கொய் பூ தழை மூழ்கி,'இன்னே என்னைக் காணுதி நீ!' என்று, இகலித், தன்நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்.
Open this verse
ஒருவன் வில்லும் தாமரையும் கை கொண்டு திரிதல்
வில்லில் கோதை நாண் உற, மிக்கோன், இகல் அங்கம்புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,அல்லில் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்செல்வக் கானில் செம் கதிர் என்னத் திரிவானும்.
Open this verse
மனைவியர் பாடலை ஆடவர் கூர்ந்து கேட்டல்
செய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ்சிலை ஒன்றுகையில் பெய்யில் காமனும் நாணும் கவினார், தம்மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்தெய்வப் பாடல், சொல் கலை என்னத், தெரிவாரும்.
Open this verse
காமன் ஆயனைப் போலுதல்
சோலைத் தும்பி மென் குழல் ஆகத், தொடை மேவும்கோலைக் கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப,நீலம் அத்து உண்கண் மங்கையர் சூழல் நிரை ஆவின்,மாலைப் போதின், மால் விடை என்ன வருவாரும்.
Open this verse
ஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும் வெல்லும்
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்காக்கல் ஆவது காமன் கை வில், எனும்வாக்கு மாத்திரம் அல்லது, வல்லியில்பூக் கொய்வாள் புருவம் கடை போதும் ஏ.
Open this verse
ஞானிகளும் காமத்தை வெல்வார் அல்லர்
நாறு பூ குழல் நல் நுதல், புன்னைமேல்ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்;ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,வீறு சேர் முலை மாதரை வெல்வர் ஓ?
Open this verse
ஒருவன் அரும்புகளையும் புதிய தளிர்களையும் கொய்தல்
சினையின் மேல் இருந்தான், உருத் தேவரால்வனையவும் அரியாள் வனப்பின் தலைநினைவும் நோக்கமும் நீக்கலன், கைகளால்நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான்.
Open this verse
மனைவியின் கோபம் கண்டு ஒருவன் தடுமாறுதல்
வண்டு வாழ் குழலாள் முகம் வாடிடத்,தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து, அவள்தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்ல ஏ.
Open this verse
அனைவரும் புனலாட்டுக்குச் செல்லுதல்
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,தூய தண் நிழல் சோலைத் துறு மலர்வேயும் செய்கை வெறுத்தனர், வெண் திரைபாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார்.
Open this verse