Verse 2385 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirutthevoor · Verse 1 of 11
பண் · காந்தாரம்
திருத்தேவூர் · 2.82.1
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்திதெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே.