Verse 7164 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalambozhil Thirutthaandagam · Verse 1 of 10

திருவாலம்பொழில் – திருத்தாண்டகம் · 6.86.1

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியைஉருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை உணர்வெலா மானானை ஓசை யாகிவருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேயதிருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
Share