Verse 4858 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 2 of 10
திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.2
வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடுகடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபல் தேவ ரஞ்சிஅடைந்துநும் சரண மென்ன அருள்பெரி துடைய ராகித்தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே.