Verse 6942 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 2 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.2

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக் கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
Share