Verse 4652 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 1 of 10
பண் · கொல்லி
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.1
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்தன் னோடுங்கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே.