Verse 6888 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 8 of 10
திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.8
முடியார் சடையின் மதியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றிதுடியா ரிடையுமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றிஅடியா ரடிமை அறிவாய் போற்றி அமரர் பதியாள வைத்தாய் போற்றிகடியார் புரமூன்று மெய்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.