Verse 6883 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 3 of 10
திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.3
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வ முடையாய் போற்றிஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாச வண்ண முடியாய் போற்றிவெய்யாய் தணியா யணியாய் போற்றி வேளாத வேள்வி யுடையாய் போற்றிகையார் தழலார் விடங்கா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.