Verse 6884 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 4 of 10
திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.4
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றிசூட்சி சிறிது மிலாதாய் போற்றி சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றிமாட்சி பெரிது முடையாய் போற்றி மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றிகாட்சி பெரிது மரியாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.