Verse 7521 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 8 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.8
திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான் அரியவன் அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே.
குறிப்பு அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப் புட்பவிதியிற் காண்க.