verse 2875 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 47 of 143
கம்பராமாயணம் 2875 · சூர்ப்பணகைப் படலம்
பேசலன் இருந்த வள்ளல்உள்ளத்தின் பெற்றி ஓராள் ,பூசல் வண்டு அரற்றும் கூந்தல்பொய்ம் மகள் ,''புகன்ற என்கண்ஆசை கண்டு அருளிற்று உண்டோ ?அன்று எனல் உண்டோ ? '' என்னும்ஊசலின் உலாவுகின்றாள் ,மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் .