verse 2894 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 66 of 143
சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்
கம்பராமாயணம் 2894 · சூர்ப்பணகைப் படலம்
அஞ்சினள் ; அஞ்சி அன்னம் , மின் இடை அலச ஓடிப்பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள் ; பருவக் காலமஞ்சு இடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்னக்குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக்கொண்டாள் .