Verse 6526 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirunallaaru Thirutthaandagam · Verse 8 of 10

திருநள்ளாறு – திருத்தாண்டகம் · 6.20.8

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்றவில்லானை எல்லார்க்கு மேலா னானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக் காளத்தி யானைக் கயிலை மேயநல்லானை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
Share