Pathigam 100 / 100 · Fifth Thirumurai · Thirunavukkarasar

Aadhiburaanam Thirukkurundhogai

ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை · 10 verses · 6309–6318

Share

பாடல்கள் The verses

1 Verse 6309
வேத நாயகன் வேதியர் நாயகன்மாதின் நாயகன் மாதவர் நாயகன்ஆதி நாயகன் ஆதிரை நாயகன்பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
Open this verse
2 Verse 6310
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்றுபத்தி செய்மனப் பாறைகட் கேறுமோஅத்த னென்றரி யோடு பிரமனுந்துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
Open this verse
3 Verse 6311
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்ஆறு கோடி நாராயண ரங்ஙனேஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
Open this verse
4 Verse 6312
வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம் மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
Open this verse
5 Verse 6313
கூவ லாமை குரைகட லாமையைக்கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
Open this verse
6 Verse 6314
பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க்கீவ னையிமை யோர்முடி தன்னடிச்சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
Open this verse
7 Verse 6315
எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனதுருவ ருக்கம தாவ துணர்கிலார்அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
Open this verse
8 Verse 6316
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்அருக்க னாவான் அரனுரு வல்லனோஇருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்கருத்தி னைநினை யார்கன் மனவரே.
Open this verse
9 Verse 6317
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கியமாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
Open this verse
10 Verse 6318
அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையைஅருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
Open this verse