விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமேகரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்இரும்பி னூறல றாததோர் வெண்டலைஎறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
Open this verse
பாடல்கள் The verses
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
Open this verse
மருந்து வானவர் தானவர்க் கின்சுவைபுரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
Open this verse
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறைமறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமாஅறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
Open this verse
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
Open this verse
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்திறம்பி யூர்வன மற்றும் பலவுளகுறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனைஎறும்பி யூரரன் செய்த இயற்கையே.
Open this verse
மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமேபுறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனைஎறும்பி யூரரன் செய்த இயற்கையே.
Open this verse
இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடுதுன்ப மும்முட னேவைத்த சோதியான்அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.
Open this verse
கண்ணி றைந்த கனபவ ளத்திரள்விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான்உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.
Open this verse
நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திடமறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.
Open this verse