அண்டத் தானை அமரர் தொழப்படும்பண்டத் தானைப் பவித்திர மாந்திருமுண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
பாடல்கள் The verses
முத்தொப் பானை முளைத்தெழு கற்பகவித்தொப் பானை விளக்கிடை நேரொளிஒத்தொப் பானை ஒளிபவ ளத்திரள்தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்வண்ணத் தானை வகையுணர் வான்றனைஎண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச்சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்படலை யானைப் பலிதிரி வான்செலும்நடலை யானை நரிபிரி யாததோர்சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்கருதி யானைக்கண் டார்மனம் மேவியபிரிதி யானைப் பிறரறி யாததோர்சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
ஆதி யானை அமரர் தொழப்படும்நீதி யானை நியம நெறிகளைஓதி யானை உணர்தற் கரியதோர்சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழுங்கோலத் தானைக் குணப்பெருங் குன்றினைமூலத் தானை முதல்வனை மூவிலைச்சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடைஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்கட்டிட் டானைக் கனங்குழை பாலன்புபட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse
முற்றி னானை இராவணன் நீண்முடிஒற்றி னானை ஒருவிர லாலுறப்பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
Open this verse