அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமைஉருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.
Open this verse
பாடல்கள் The verses
வையம் வந்து வணங்கி வலங்கொளும்ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்பைகொ ளாடர வார்த்த பழனன்பால்பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.
Open this verse
வண்ண மாக முறுக்கிய வாசிகைதிண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியேபண்ணு மாகவே பாடும் பழனத்தான்எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.
Open this verse
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிடவாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதிபாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.
Open this verse
நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்பாலு முண்டு பழனன்பா லென்னிடைமாலு முண்டிறை யென்றன் மனத்துளே.
Open this verse
மந்த மாக வளர்பிறை சூடியோர்சந்த மாகத் திருச்சடை சாத்துவான்பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.
Open this verse
மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்பார்க்க நின்று பரவும் பழனத்தான்தாட்கண் நின்று தலைவணங் கார்களே.
Open this verse
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டுதேறு வாரலர் தீவினை யாளர்கள்பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்கூறி னானுமை யாளொடுங் கூடவே.
Open this verse
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்பற்றி னார்வினை தீர்க்கும் பழனனைஎற்றி னான்மறக் கேனெம் பிரானையே.
Open this verse
பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறைஅங்க மான இறுத்தருள் செய்தவன்பங்க னென்றும் பழனன் உமையொடுந்தங்கன் றானடி யேனுடை யுச்சியே.
Open this verse