Pathigam 2 / 100 · Fifth Thirumurai · Thirunavukkarasar

Koyil Thirukkurundhogai

கோயில் - திருக்குறுந்தொகை · 10 verses · 5313–5322

Share

பாடல்கள் The verses

1 Verse 5313
பனைக்கை மும்மத வேழ முரித்தவன்நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
Open this verse
2 Verse 5314
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனைமூர்த்தி யைமுத லாய ஒருவனைப்பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
Open this verse
3 Verse 5315
கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறிஇட்ட மாயிடு காட்டெரி யாடுவான்சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனைஎட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
Open this verse
4 Verse 5316
மாணி பால்கறந் தாட்டி வழிபடநீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்றதாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
Open this verse
5 Verse 5317
பித்த னைப்பெருங் காடரங் காவுடைமுத்த னைமுளை வெண்மதி சூடியைச்சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்றஅத்த னையடி யேன்மறந் துய்வனோ.
Open this verse
6 Verse 5318
நீதி யைநிறை வைமறை நான்குடன்ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்தாதி யையடி யேன்மறந் துய்வனோ.
Open this verse
7 Verse 5319
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன் பைகொள் பாம்பரை யார்த்த பரமனார் செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள் ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
Open this verse
8 Verse 5320
முழுதும் வானுல கத்துள தேவர்கள்தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனைஇழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.
Open this verse
9 Verse 5321
காரு லாமலர்க் கொன்றையந் தாரனைவாரு லாமுலை மங்கை மணாளனைத்தேரு லாவிய தில்லையுட் கூத்தனைஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.
Open this verse
10 Verse 5322
ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
Open this verse