ஏயி லானையெ னிச்சை யகம்படிக்கோயி லானைக் குணப்பெருங் குன்றினைவாயி லானை மனோன்மனி யைப்பெற்றதாயி லானைத் தழுவுமென் ஆவியே.
Open this verse
பாடல்கள் The verses
முன்னை ஞான முதற்றனி வித்தினைப்பின்னை ஞானப் பிறங்கு சடையனைஎன்னை ஞானத் திருளறுத் தாண்டவன்தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
Open this verse
ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள்ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன்ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டுஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
Open this verse
புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை புழுவி னுங்கடையேன்புனி தன்றமர் குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
Open this verse
மலையே வந்து விழினும் மனிதர்காள்நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல்தலைவ னாகிய ஈசன் றமர்களைக்கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.
Open this verse
கற்றுக் கொள்வன வாயுள நாவுளஇட்டுக் கொள்வன பூவுள நீருளகற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
Open this verse
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரேபுனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனிஇனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
Open this verse
என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்தன்னை நானுமு னேது மறிந்திலேன்என்னைத் தன்னடி யானென் றறிதலுந்தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
Open this verse
தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்உள்ளத் தேறல் அமுத ஒளிவெளிகள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.
Open this verse
குறிப்பு இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
Open this verse