Pathigam 76 / 100 · Fifth Thirumurai · Thirunavukkarasar

Thirukkaanoor Thirukkurundhogai

திருக்கானூர் - திருக்குறுந்தொகை · 10 verses · 6060–6069

Share

பாடல்கள் The verses

1 Verse 6060
திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறைஉருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்கருவ னாகி முளைத்தவன் கானூரிற்பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
Open this verse
2 Verse 6061
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதிஉண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.
Open this verse
3 Verse 6062
தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்காயத் தேயுளன் கானூர் முளையினைவாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
Open this verse
4 Verse 6063
குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.
Open this verse
5 Verse 6064
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையைமெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்அத்தன் பாத மடைதல் கருமமே.
Open this verse
6 Verse 6065
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்செல்வ மல்கு திருக்கானூ ரீசனைஎல்லி யும்பக லும்மிசை வானவர்சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.
Open this verse
7 Verse 6066
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்காரு மாருதங் கானூர் முளைத்தவன்சேர்வு மொன்றறி யாது திசைதிசைஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.
Open this verse
8 Verse 6067
ஓமத் தோடயன் மாலறி யாவணம்வீமப் பேரொளி யாய விழுப்பொருள்காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.
Open this verse
9 Verse 6068

குறிப்பு இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

Open this verse
10 Verse 6069
வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலைஉன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
Open this verse