Pathigam 79 / 100 · Fifth Thirumurai · Thirunavukkarasar

Thiruppullirukkuveloor Thirukkurundhogai

திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை · 10 verses · 6087–6096

Share

பாடல்கள் The verses

1 Verse 6087
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
Open this verse
2 Verse 6088
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமேபோற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
Open this verse
3 Verse 6089
அரும றையனை ஆணொடு பெண்ணனைக்கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்உருகி நைபவர் உள்ளங் குளிருமே.
Open this verse
4 Verse 6090
தன்னு ருவை யொருவர்க் கறிவொணாமின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.
Open this verse
5 Verse 6091
செங்கண் மால்பிர மற்கு மறிவொணாஅங்கி யின்னுரு வாகி அழல்வதோர்பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
Open this verse
6 Verse 6092
குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
Open this verse
7 Verse 6093
கையி னோடுகால் கட்டி யுமரெலாம்ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.
Open this verse
8 Verse 6094
உள்ளம் உள்கி உகந்து சிவனென்றுமெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையேபுள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
Open this verse
9 Verse 6095

குறிப்பு இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

Open this verse
10 Verse 6096
அரக்க னார்தலை பத்தும் அழிதரநெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவியபொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.
Open this verse