verse 7113 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 13 of 43
அங்கதன் இராவணன்பால் தூதனாக விரைந்து சேறல்
கம்பராமாயணம் 7113 · அங்கதன் தூதுப் படலம்
பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வதே போல்,வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,“மாருதி அல்லன், ஆகின், நீ ‘எனும் மாற்றம் பெற்றேன்;யார் இனி என்னோடு ஒப்பார்? ‘ என்பதோர் இன்பம் உற்றான்.