verse 91 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 91 · சிறுதேர்ப் பருவம்
போரோடு படைதுறந் துடறிறந் தொடுசெம் புனலோட வோடிநிமிரும்புணரிப் பெருந்தானை யவுணப் படைத்தலைவர் பூதப் படைத்தலைவர்முன்தாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட தழல்விழிக் கெதிர்செலாததாளுக்கு வாள்சோர் தடக்கைக்கு நாமநும் தாலிக்கு வேலிகொலெனாப்பீரோடு கொங்கைக்க ணீரோடு வெள்ளருவி பெருகக் கடைக்கணிற்கும்பெய்வளை யவர்க்கோத வவர்விழிக டொறுமிளம் பேதையர்கள் கண்டொறுமெனத்தேரோடு மொருபெருஞ் சிலையோடு நின்றவன் சிறுதே ருருட்டியருளேதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.