Verse 4852 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 6 of 10
திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.6
எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்றபெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகிமண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர்விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.