Verse 4951 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Nenjjameesanaininaindha Thirunerisai · Verse 7 of 10
நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.7
நீதியால் நினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்சாதியைச் சங்க வெண்ணீற் றண்ணலை விண்ணில் வானோர்சோதியைத் துளக்க மில்லா விளக்கினை அளக்க லாகாஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.