verse 4 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 4
குப்பாயங் கொடுப்பவனோ கொழுங்கண்மல ரிடுபவனோசெப்பாய முலையுமையாய்த் திகழ்ந்திடப்பா லுறைபவனோவெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோமருவாழி யென்றுரைக்கு மடைப்பள்ளி காப்பவனோகையம்பா யெழுபவனோ கருமுகிலாய்ச் சுமப்பவனோவையம்பாய் வெள்விடையாய் வண்கொடியா யுறுபவனோதேராவோர் மனையாளைச் சேர்ப்பவனோ நெடுமாலென்றோராவோர் புலவரெலா முவந்தேத்தப் பொலிவோய்கேள்!அடித்தழும்பு புறத்திருக்க வாரியர்கோ மகன்கொடுத்தமுடித்தழும்புங் கொண்டனைவெம் முலைத்தழும்பிற் சீரியதோ!அருகாக முப்புவன மடங்கவெரித் தருளுநினக்கொருகாக மெரித்தனையென் றுரைப்பதுமோர் புகழாமோ!சீரியர்கைப் புனல்கொல்லோ திருந்துமைகைப் புனன்முடிமேலாரியர்கைப் புனல்கொள்வா யடங்கநனைத் திடுங்கொல்லோ!தருநிதிக்கோ விருக்கவொரு சார்வணிக ரொடுகலந்தாய்பெருநிதிக்கோ வெனிற்பெருமான் பேராசை பெரிதன்றே !தொடிமுழங்க மணியொலித்துத் துணைவிபுரி பூசைகோலோவிடிமுழங்கப் புரிபூசை யெஞ்ஞான்று மினிதுவப்பாய் !உனையடைந்தார் பயமகன்றின் புறுவரெனற் கணியுரகங்கனையடைந்த விடிநோக்கி களித்துறைதல் கரியன்றே!அவனவ ளதுவென வறைதரு வகைமையுளிவனிவ ளிதுவென வியைதர லருமையை;அருவமு முருவமு மருவமொ டுருவமுமொருவற வுளையெனி னிலையென வொளிருவை;இதுவலை யதுவலை யுதுவலை யெதுவெனமுதுமறை கதறவு மதன்முடி மருவுவை;இருளென நிலவென வெழுதரு கதிரெனவருளுயி ருறுதர மணிதர நிலவுவை.அருநாம மெனச்சொலுநின் னாயிரநா மத்துளொருதிருநாமங் கூற்றடுநின் றிருவடிதாக் குதன்மிகையே!பிரமநீ யெனவழுதி பிரம்படியே யுணர்த்தியதுசிரமம்வே தாகமங்கள் செப்புதனின் றிருவாய்க்கே!உள்வாரு ளொருவரே யொருகோடிக் கமைந்துறவுங்கள்வாரே வுடைக்கோவைக் காயவிழி மலர்த்தியதென்!கண்டவிட நித்தியத்தைக் காட்டவுங்கங் காளமுதலண்டவிடந் தரவைத்தா யம்புயஞ்செய் குற்றாமெவன்!ஒருங்கருவி வரை நிகர்சோ வொருங்கெரிக்கு நகையிருக்கப்பெருங்கருவி பலகொண்டாய் பித்தனெனல் விளக்கினையோ!ஓரெழுத்துக் குரியபொரு ளொருநெடுமா லயனென்பார்நீரெழுத்து நிகர்மொழிநின் னிலவிதழி முன்னெவனாம்!துருவொரு தயையினைந் தொழிலி யற்றியுமருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியுமெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.சடைநெடு முடியமர் செல்லினை;தவமுயல் பவர்வினை கல்லினை;கடையரு வடவரை வில்லினை;கவினுற நெடுமறை சொல்லினை;மிடைவலி யினர்தரு பல்லினை;விசயனொ டெதிர்பொரு மல்லினை;அடைதரு மிடையதள் புல்லினை;அளவிட லரியதொ ரெல்லினை;அருள் கொடுத்தனை;இருள் கொடுத்தனை;ஆல மாந்தினை;சூல மேந்தினை;இசைவி ரித்தனை;வசையி ரித்தனை;எங்கு நீடினை;சங்கு சூடினை;மதிய ணிந்தனை;கொதித ணிந்தனை;மழுவ லத்தினை;தொழுந லத்தினை;பொருவி றந்தனை;கருவ றந்தனை;பொய்யி னீங்கினை;மெய்யி னோங்கினை.எனவாங்கு,பசித்தழூஉ ஞானப் பாலுண் மழவுமேற்றொடு சூல மேற்றதோ ளரசுமவிர்தரு செம்பொ னாற்றிடை யிட்டுக்குளத்தி லெடுத்துக் கொண்ட கோவுங்கனவிலு மமரர் காணரு நின்னைப்பரிமா மிசைவரப் பண்ணிய முதலுங்கரைதரு தமிழ்க்குக் காணி கொடுத்தநின்றிருச் செவிக்க ணெறிகுறித் தறியாப்பொல்லாப் புலைத்தொழிற் கல்லாச் சிறியேனெவ்வகைப் பற்று மிரித்தவர்க் கன்றிமற்றையர்க் கொல்லா வயங்கருள் பெறுவான்கொடுவிட மமுதாக் கொண்டதை யுணர்ந்துகுற்றமுங் குணமாக் கொள்வையென் றெண்ணிப்புன்மொழித் துதிசில புகட்டினனன்மொழி யெனினு மருளுதி விரைந்தே.