அவ் இடத்து , அவர் மறுகி , அஞ்சி , நெஞ்சு அழி அமைதி ,வெம் விடத்தினை மறுகு தேவர் , தானவர் , வெருவல்தவ்விடத் , தனி அருளு தாழ்சடைக் கடவுள் என ,'இவ் இடத்து இனிது இருமின் ; அஞ்சல் ' என்று இடை உதவி .
'தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின் ,மூவர் ; மற்று , இவர் இருவர் ; மூரிவில் கரர் ; இவரையாவர் ஒப்பவர் , உலகின் ? யாது இவர்க்கு அரிய பொருள் ?கேவலம் அத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு ? '
'தருமமும் , தகவும் , இவர் தனம் எனும் தகையர் ; இவர் ,கருமமும் பிறிது ஒர்பொருள் கருதி அன்று ; அது கருதின் ,அரும் மருந்து அனையது , இடை அழிவு வந்து உளது ; அதனை ,இரு மருங்கினும் , நெடிது துருவுகின்றனர் , இவர்கள் ' .
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி ,அன்பினின் , உருகுகின்ற உள்ளத்தன் , ஆர்வத்தோரைமுன் பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் .
துன்பினைத் துடைத்து , மாயத்தொல் வினை தன்னை நீக்கித்தென்புலத்து அன்றி , மீளாநெறி உய்க்கும் தேவரோ தாம் ?என்பு நெக்கு உருகுகின்றது ;இவர்கின்றது அளவு இல் காதல் ;அன்பினுக்கு அவதி இல்லை ;அடைவு என்கொல் ? அறிதல் தேற்றேன் .
இ வழி எண்ணி , ஆண்டு , அவ் இருவரும் எய்தலோடும் ,செம் வழி உள்ளத் தானும் , தெரிவு உற எதிர்சென்று எய்திக்'கவ்வை இன்றாக , நுங்கள் வரவு ! ' எனக் , கருணையோனும் ,எ வழி நீங்கியோய் ? நீயார் ? என , விளம்பல் உற்றான் .
'இம் மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்செம்மலுக்கு ஏவல் செய்வேன் ; தேவ ! நும்வரவு நோக்கிவிம்மல் உற்று அனையன் ஏவ , வினவிய வந்தேன் ' என்றான் -எ மலை குலமும் தாழ , இசை சுமந்து , எழுந்த தோளான் .
`'இல்லாத உலகத்து எங்கும்ஈங்கு இவன் இசைகள் கூரக்கல்லாத கலையும் , வேதக்கடலுமே '' என்னும் காட்சிசொல்லாலே தோன்றிற்று அன்றே ?யார்கொல் இச்சொல்லின் செல்வன் ?வில் ஆர் தோள் இளைய ! வீர ! –விரிஞ்சனோ ? விடை வலான் ஓ ?
மாணி ஆம் படிவம் அன்று ,மற்று இவன் வடிவம் ; மைந்த !ஆணி இவ் உலகுக்கு எல்லாம்என்னலாம் ஆற்றற்கு ஏற்றசேண் உயர் பெருமை தன்னைச்சிக்கு அறத் தெளிந்தேன் ; பின்னர்க்காணுதி மெய்ம்மை என்று ,தம்பிக்குக் கழறிக் , கண்ணன் .
'எவ்வழி இருந்தான் , சொன்ன கவி குலம் அத்து அரசன் யாங்கள்அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம் ;இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்னசெவ்வழி உள்ளத் தோனைக் காட்டுதி , தெரிய ' என்றான் .
அஞ்சினர்க்கு அடைக்கலம் கொடுத்தலின் சிறப்புக் கூறியது
'ஒடுங்கல் இல் உலகம் யாவும்உவந்தன உதவி , வேள்விதொடங்கின , மற்றும் , முற்றத்தொல் அறம் துணிவர் அன்றே ,கொடும் குலம் பகைஞன் ஆகிக்கொல்லிய வந்த கூற்றைநடுங்கினர்க்கு அபயம் நல்கும்அதனினும் , நல்லது உண்டோ ? '
சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்டஆரியன் ; அமரர்க்கு ஆகி அசுரரை ஆவி உண்டவீரியன் ; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட ,காரியன் ; கருணை அன்ன கண்ணன் அக்கவிகை மன்னன் .
'புயல் தரும் மதம் திண் கோட்டுப்புகர் மலைக்கு இறையை ஊர்ந்து ,மயல் தரும் அவுணர் யாரும்மடிதர , வரிவில் கொண்டஇயல் தரும் புலமைச் செங்கோல்மனு முதல் யாரும் ஒவ்வாத்தயரதன் , கனக மாடத்தட மதில் அயோத்தி வேந்தன் . '
என்று , அவன் தோற்றம் ஆதிஇராவணன் இழைத்த மாயப்புன் தொழில் இறுதி ஆகப் ,புகுந்து உள பொருள்கள் எல்லாம் ,ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் ,உணர்த்தினன் ; உணர்த்தக் கேட்டு ,நின்ற அக் காலின் மைந்தன் ,நெடிது உவந்து , அடியில் தாழ்ந்தான் .
மின் உருக் கொண்ட வில்லோர்வியப்புற , வேத நன்னூல்பின் உருக் கொண்டது என்னும்பெருமை ஆம் பொருளும் நாணப் ,பொன் உருக் கொண்ட மேரு ,புயத்திற்கும் உவமை போதாத்தன் உருக் கொண்டு நின்றான் ,தருமத்தின் தனிமை தீர்ப்பான் .
கண்டிலன் , உலகம் மூன்றும்காலினால் கடந்து கொண்டபுண்டரிகக் கண் ஆழிப்புரவலன் , பொலன் கொள் சோதிகுண்டல வதனம் என்றால் ,கூறலாம் தகைமைத்து ஒன்றோபண்டை நூல் கதிரோன் சொல்லப்படித்தனன் படிவம் ? அம்மா .