Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 2 of 43
‘தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி,“மாதினை விடுதியோ? “ என்று உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது, அறனும் அஃதே;நீதியும் அஃதே ‘என்றான் கருணையின் நிலையம் அன்னான்.